புதுடெல்லி,
தலைநகர் டெல்லி விமானநிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்படத் தயாராகி வானில் பறந்தது. வானில் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, விமானத்தின் உள்பகுதி கேபினில் புகை வெளிவர தொடங்கியது.
இதனை கண்டு பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.