தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

கார்வார் அருகே சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிர் தப்பினார்.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சமையல் எரிவாயு ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது

. உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா ஹொன்னாவர் நகர் அருகே கெருசோப்பா ரவுண்டானா பகுதியில் சென்று காண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தறிகெட்டு ஓடியது. பின்னர் டேங்கர் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கார்வார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் கிரேனை வரவழைத்து டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு வழிவகுத்து கொடுக்கப்பட்டது. டேங்கர் லாரி கவிழும்போது வாகனங்கள் எதுவும் வராததாலும், சமையல் எரிவாயு கசியாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை