தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தரிகெரே அருகே மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு- 

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பெட்டதஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தீக்ஷித்(வயது 28). இவரது நண்பர் கணேஷ்(30). நேற்று முன்தினம் மாலை இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தரிகெரேவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தீக்ஷித் ஓட்ட, கணேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் தரிகெரே முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே தெருநாய் ஓடி வந்தது. இதனால் தீக்ஷித் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார்.

ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தீக்ஷித் உயிரிழந்தார். கணேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை