தேசிய செய்திகள்

உன்சூர் தாலுகாவில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் சிக்கினார்

உன்சூர் தாலுகாவில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் போலீசில் சிக்கினார்

உன்சூர்-

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா தட்டேகெரே கிராமத்தில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக உன்சூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தட்டேகெரே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அங்குள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் விஸ்வநாத் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு