தேசிய செய்திகள்

போட்டித் தேர்வுகளில் ஆதார் அடிப்படையில் சரிபார்ப்பு பணி - எஸ்.எஸ்.சி. முடிவு

விண்ணப்பதாரர்கள் ஆதார் அடிப்படையில் ‘பயோமெட்ரிக்’ மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தேர்வாணையங்களில் பணியாளர் தேர்வாணையமான (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) எஸ்.எஸ்.சி.யும் ஒன்றாகும்.

அடுத்த மாதத்தில் இருந்து இனிமேல் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது, விண்ணப்பதாரர்கள் ஆதார் அடிப்படையில் 'பயோமெட்ரிக்' மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம். இது, கட்டாயம் அல்ல, விருப்ப அடிப்படையில் செய்யக்கூடியது என்று எஸ்.எஸ்.சி. கூறியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து