தேசிய செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையம்: ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது - விமான நிலைய ஆணையம்

தூத்துக்குடி விமான நிலையத்தை சுமார் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பயணிகள் வருகை அதிகரித்திருப்பதை அடுத்து சுமார் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஏ-321 வகை விமானங்களை இயக்குவதற்கு ஏற்ப விமான ஓடுதளத்தை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் நிர்மாணித்தல், விமான நிலையத்தில், 13 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான முனையக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய முனைய கட்டிடம் மூலம் 600 பயணிகளை கையாள முடியும்.

மேலும், நவீன வசதிகளுடன் கூடிய கார் பார்க்கிங் மற்றும் புதிய அணுகு சாலை அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் வசதிக்காக 2 ஏரோபிரிட்ஜ்கள் அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஏ-321 வகை விமானங்களை நிறுத்தி வைப்பதற்காக 5 விமான நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படும்.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்