மும்பை,
மும்பை ஆரேகாலனி வனப்பகுதியில் அடிக்கடி சிறிய அளவிலான தீ விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் அங்கு 21 முறை காட்டு தீ ஏற்பட்டு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் காட்டு தீயை தடுக்க தவறிவிட்டதாக மாநில அரசு மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் இதுகுறித்து அந்த கட்சி வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் துறை மந்திரி எங்கே போனார்?. ஆரேயை காப்பாற்றுவோம் என அவர் கொடுத்த பெரிய வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது?. இதே பாணியில் தான் மும்பை சதுப்புநிலக்காடுகள் அழிக்கப்பட்டன. முதலில் சதுப்புநிலம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பின்னர் அது ஆக்கிரமிக்கப்பட்டது. அதன்பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி வனப்பகுதி இல்லை என அறிவிக்க முயற்சிகள் நடந்தன. தற்போது இது ஆரேகாலனியிலும் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.