தேசிய செய்திகள்

ஆம் ஆத்மி நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டு கொலை : பஞ்சாபில் அதிர்ச்சி

ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் தொகுதி பொறுப்பாளர் ராஜ்விந்தர் தியாராவுக்கு மிகவும் நெருக்கமானவராக லக்கி ஓபராய் கருதப்படுகிறார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி லக்கி ஓபராய் வெள்ளிக்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார். ஜலந்தரில் உள்ள குருத்வாராவில் இருந்து இன்று காலை 7.50 மணியளவில் வெளியே வந்த லக்கி ஓபராய், அவரது காரில் ஏறினார். அப்போது இரண்டு ஸ்கூட்டர்களில் வந்த மர்ம நபர்கள், காருக்குள் இருந்த லக்கி ஓபராயை துப்பாக்கியால் சுட்டனர்.

சுமார் 8 முதல் 10 ரவுண்டுகள் அவரை நோக்கி சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உயிரிழந்துவிட்டதாக ஜலந்தர் நகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஜலந்தர் தொகுதி பொறுப்பாளர் ராஜ்விந்தர் தியாராவுக்கு மிகவும் நெருக்கமானவராக லக்கி ஓபராய் கருதப்படுகிறார். லக்கி ஓபராயின் மனைவி அண்மையில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.