தேசிய செய்திகள்

ஆம்ஆத்மி மிகப்பெரிய ஊழல் கட்சி - பாஜக குற்றச்சாட்டு

ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மதுபானக் கெள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி தலைவருமான மணீஷ் சிசோடியா இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில், ஆம்ஆத்மி கட்சி மிகப்பெரிய ஊழல் கட்சி என பாஜக விமர்சித்துள்ளது. பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "ஆம் ஆத்மி ஒரு வித்தையான கட்சியாகும். ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கப்பட்டது, அதன் தலைவர்கள் பெரிய ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய ஊழல் கட்சியாக மாறிவிட்டது.

இன்று மணிஷ் சிசோடியா தனது ஆதரவாளர்களுடன் திறந்த காரில் கோஷங்களை எழுப்பி சென்ற விதம், ஆம் ஆத்மி கட்சி ஊழல் உலகக் கோப்பையை வென்றது போல இருந்தது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்