தேசிய செய்திகள்

உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

உலக அளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளதாக, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார்,

புதுடெல்லி,

உலக புலிகள் தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அகில இந்திய புலிகள் கணக்கீட்டு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று வெளியிட்டார். 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட (தற்போதும் அதே எண்ணிக்கை) இந்த அறிக்கையின்படி இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும், உத்தரகாண்டில் 442 புலிகளும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ஜவடேகர் பேசும்போது, உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. வன உயிரினங்கள் திறம்பட பாதுகாக்கப்படுவதில் இந்தியா உலகை வழிநடத்துகிறது. புலிகள் என்பது இயற்கையின் விலைமதிப்பில்லா ரத்தினங்கள். அவற்றின் இருப்பு, காடுகள் நல்ல நிலையில் இருப்பதை காண்பிக்கிறது என்று கூறினார்.

மேலும், இந்தியாவில் தற்போது 30 ஆயிரம் யானைகளும், 3,000 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும், 500-க்கும் மேற்பட்ட சிங்கங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை மந்திரி பாபுல் சுப்ரியோவும் கலந்துகொண்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு