அடுக்குமாடி குடியிருப்பில் அதிகம்
மும்பையில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நகால் 1,508 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் தான் வேகமாக பரவும் என கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் மும்பையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களாக உள்ளனர்.
90 சதவீதம் பேர்
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், ''கடந்த 2 மாதங்களில் 23 ஆயிரத்து 2 பேர் மும்பையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் வசிப்பவர்கள். 10 சதவீதம் போ மட்டுமே குடிசைப்பகுதிகளை சேர்ந்தவர்கள்" என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தற்போது குடிசைப்பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதாகவும், அவர்கள் நடுத்தர, ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என மாநகராட்சி டாக்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.