தேசிய செய்திகள்

பரோலில் விடுவிக்க கோரிய அபுசலீம் மனு நிராகரிப்பு

திருமணம் செய்வதற்காக பரோலில் விடுவிக்க கோரிய மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீம் மனு நிராகரிக்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அபுசலீம் கடந்த 2005ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை தடா கோர்ட்டு அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சிறை நிர்வாகத்திடம், தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதனால் எனக்கு 40 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என மனு அளித்தார். இந்த மனுவை சிறை நிர்வாகம் கொங்கன் மண்டல கமிஷனருக்கு அனுப்பியது. இதைத்தொடர்ந்து அவரது மனுவை பரீசிலித்த மண்டல கமிஷனர், குற்றவாளி அபுசலீமின் பாதுகாப்பு கருதி அவருக்கு பரோல் வழங்க அனுமதி மறுத்து விட்டார்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு அபுசலீம் தனது திருமணத்திற்காக விண்ணப்பித்த பரோல் மனுவை தடா கோர்ட்டு நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு