தேசிய செய்திகள்

விபத்தில் கார் தீப்பற்றி கொண்டதால் வெளியே வர முடியாமல் 3 பெண்கள் எரிந்து பலி

குஜராத்தில் விபத்தில் காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியானார்கள்

தினத்தந்தி

ராஜ்கோட்:

குஜராத் மாநிலம் கோண்டல் ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையில் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியில் பருத்தி ஏற்றிவந்த டிரக் மீது கார் ஒன்று மோதிய வேகத்தில், தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் வந்த 3 பெண்கள் உடல்கருகி பலியாகினர்.

காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியானார்கள். கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.உயிரிழந்தவர்கள் ரேகா ஜடேஜா (62), ராஸிக் ராய்ஜடா (80), முகுந்த்பா ராய்ஜடா (45) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு