தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர சி.பி.ஐ.க்கு முந்தைய பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியது. பின்னர் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்தது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர வழங்கிய அனுமதியை மாநில அரசு வாபஸ் பெற்றது.

இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்  சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ தரப்பில்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு