தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசில் அதிரடி: மந்திரி பதவியை தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி

திரிணாமுல் காங்கிரசில் மந்திரி பதவியை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

மேற்கு வங்காள அரசில் வனத்துறை மந்திரியாக இருந்த ராஜீப் பானர்ஜி கடந்த 22ந்தேதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அதற்கான காரணம் பற்றி அவர் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

திரிணாமுல் காங்கிரசில் பள்ளி தொகுதியின் பெண் எம்.எல்.ஏ.வான வைஷாலி டால்மியா, ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்த சில மணிநேரங்களில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ராஜீப் ராஜினாமா செய்த பின்னர், கட்சியின் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து டால்மியா பேசியுள்ளார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜீப் பானர்ஜி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு