தேசிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி உணவகத்தில் அதிரடி ஆய்வு - சிக்கிய காலாவதியான பொருட்கள்

உணவகத்தில் தரமற்ற உணவு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண்கள் உணவகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தரமற்ற உணவு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததாகவும், அதனை தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் ஆய்வின் போது, உணவகத்தில் இருந்த காலாவதியான பொருட்கள், தரமற்ற உணவுப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தின் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...