புதுடெல்லி,
தலீபான்கள் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை, மருந்து பொருட்களை சாலை வழியாக அனுப்புவதற்காக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்து பொருட்களை அனுப்பி வைப்பதில் இந்திய அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார். ஏற்கனவே 1,600 மெட்ரிக் டன் மருந்துகள் கடந்த 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.