தேசிய செய்திகள்

ஆந்திராவில் மேலும் 1,179-பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,179- பேருக்கு கொரோனா வைஅஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,651- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 905 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,089- ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 40 ஆயிரத்து 708- ஆகவும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 12 ஆயிரத்து 714- ஆகவும் உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 192 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்