தேசிய செய்திகள்

கேரளாவில் பேட்டி எடுத்த போது பெண் நிருபரை திட்டிய நடிகர் கைது...!

கேரளாவில் பேட்டி எடுத்த போது பெண் நிருபரை திட்டிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீநாத் பாசி (வயது34). இவர் தற்போது நடித்துள்ள கொச்சியில் சட்டம்பி என்ற சினிமா தொடர்பாக சமூக வலைத்தள சேனலுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேட்டி எடுத்த பெண் நிருபரை தகாத வார்த்தைகளால் மோசமாக திட்டியதுடன், பெண்களை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கேமராமேனையும் தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அந்த பெண் நிருபர் கொச்சி மரடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விளக்கம் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதை தொடர்ந்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். ஆனால், அவர் போலீசாரிடம், பெண் நிருபரை திட்டவில்லை, கேட்ட கேள்விகளுக்கு மட்டும் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை