கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

புனேவில் உள்ள இந்திய திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமனம்

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புனே,

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புனேவில் உள்ள இந்த நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்த எக்ஸ் பதிவில் அவர், "இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."

"உங்களின் முந்தைய அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் ஆகியவை இந்த நிறுவனத்திற்கு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்