புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரை துறையின் உயரிய, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவில்லை. விருதினை பெற்று கொண்ட ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து உடல் நலம் பற்றி கேட்டறிந்துள்ளார். விருது பெற்றதற்காக அவரிடம் வாழ்த்தும் பெற்றார்.