தேசிய செய்திகள்

நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் - பிரசாரத்தில் அய்யப்ப சாமி பெயரை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்தில் அய்யப்ப சாமி பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்த நடிகர் சுரேஷ்கோபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தினத்தந்தி

திருச்சூர்,

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சுரேஷ்கோபி. இவர் பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அந்த கட்சியின் சார்பில் தற்போது திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அவர் களம் இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது அய்யப்ப சாமியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக திருச்சூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான, அனுபமாவிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து 48 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறு சுரேஷ்கோபிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நடவடிக்கை குறித்து மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா கூறும்போது, தேர்தல் பிரசாரத்தின் போது அய்யப்ப சாமியின் பெயரையோ அல்லது வேறு எந்த கடவுளின் பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் நடிகர் சுரேஷ்கோபி அய்யப்ப சாமி குறித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் அவருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது சரியான நடவடிக்கைதான் என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை