தேசிய செய்திகள்

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு: மும்பை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-மந்திரிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கடிதம்

நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-மந்திரிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை போலீசார் சுஷாந்த் சிங் மரண வழக்கில் 50 நாட்களை கடந்தும் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யவில்லை என பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பாத்கல்கர் குற்றம்சாட்டி உள்ளார். எனவே இந்த விவகாரத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர், " நடிகர் சுஷாந்த் சிங், அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கை போலீசா விசாரிக்கும் அணுகுமுறை தவறாக உள்ளது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இரு வழக்கையும் விசாரிக்கும் போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, போலீஸ் கமிஷனரை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் " என கூறியுள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை