தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவில் இருந்து நடிகர் விலகல்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகரான ஜாய் பனர்ஜி பா.ஜனதாவில் இருந்து விலகினார்.

தினத்தந்தி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகரான ஜாய் பனர்ஜி, கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். கட்சி சார்பில் 2 முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கட்சியில் சமீப காலமாக தான் புறக்கணிக்கப்படுவதாகவும், எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சாதாரண மக்களுக்காக உழைக்க நான் விரும்பினேன். ஆனால் தொடர்ந்து நான் பா.ஜனதாவிலேயே இருந்தால் அது முடியாது. கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து என்னை நீக்கியதன் மூலம், எனது பாதுகாப்பையும் கட்சித்தலைமை எடுத்துக்கொண்டு உள்ளது என குற்றம் சாட்டினார்.

கட்சிக்காக மேலும் தீவிரமாக பணியாற்ற விரும்புவதாக கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக கூறிய ஜாய் பானர்ஜி, ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், கட்சியில் இனியும் புறக்கணிக்கப்படுவதை பொறுக்க முடியாது என்றும் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்