தேசிய செய்திகள்

கணவரை விவாகரத்து செய்த கன்னட சின்னத்திரை நடிகை

பிரபல கன்னட நடிகை சைத்ரா தனது கணவரை விவாகரத்து செய்தார்.

தினத்தந்தி

பெங்களூரு:

கன்னட சின்னத்திரை நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமாக இருப்பவர் சைத்ரா வாசுதேவன் (வயது 39). இவருக்கும் சத்யா நாயுடு என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சைத்ரா வாசுதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் விவாகரத்து பெற்றுள்ளதாக கூறியுள்ளார். கடந்த பல மாதங்களாக நான் இதுதொடர்பாக சிந்தித்து வந்தேன். இறுதியில் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

யாரும் இதனை பேசுபொருளாக மாற்ற வேண்டாம். சினிமா துறையில் பல தடைகளை தாண்டி நான் வந்துள்ளேன். இனி அதை சிறப்பான முறையில் தொடர உள்ளேன். அதற்கு உங்களின் அன்பும், ஆதரவும் தேவை என்று கூறி இருந்தார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பன்முக திறமைகளை கொண்ட நடிகை சைத்ரா வாசுதேவன், தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவரை விவாகரத்து செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்