தேசிய செய்திகள்

அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம்: நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார்

அனுமதியின்றி செயலியில் படம் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகை நுஸ்ரத் ஜெகன் எம்.பி. போலீசில் புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா,

பிரபல இந்தி நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமாக இருப்பவர் நுஸ்ரத் ஜெகன். இவர் கொல்கத்தாவின் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், இணையதள செயலி குறித்த விளம்பரத்தில் எனது உருவப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட செயலி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை தனது டுவிட்டர் பதிவில், எனது அனுமதி இல்லாமல் உருவப்படத்தை பயன்படுத்தியது ஒருபோதும் ஏற்க முடியாதது. கொல்கத்தா போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகையின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு