அகர்தலா,
திரிபுராவில் முதல்-மந்திரி பிப்லப் தலைமையில் பா.ஜ.க. பொது கூட்டம் நேற்று நடந்தது. இதில், தொண்டர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில், அவர்கள் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு திரிபுராவின் கூடுதல் எஸ்.பி. பி.ஜே. ரெட்டி கூறும்போது, திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சாயோனி கோஷ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய முதற்கட்ட சான்று கிடைத்து உள்ளது என கூறியுள்ளார். இதனால், கோஷ் மீது 307, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அகர்தலா போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.
இந்த நிலையில், மேற்கு திரிபுராவின் முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையில் சாயோனி கோஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.