தேசிய செய்திகள்

தடுப்பூசி கேட்டு மிரட்டும் மாநில முதல்வர்கள்; இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்கும் ஆதார் பூனவல்லா

தடுப்பூசி கேட்டு மிரட்டும் மாநில முதல்வர்கள்,தொழிலதிபர்கள் அதனால் இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு ஆதார் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மும்பை:

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுகின்றனர்.

தனக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு அவர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனவல்லா சார்பில் அவரது வழக்கறிஞர் தத்தா மானே மனுவை தாக்கல்செய்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு