புதுடெல்லி,
கடந்த நிதி ஆண்டில் (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் (2023-2024) இந்திய பொருளாதாரம் 6.4 சதவீத வளர்ச்சி அடையும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்து இருந்தது. இந்நிலையில், நேற்று வெளியிட்ட கணிப்பில், அதே 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்துள்ளது.
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் நுகர்வு தேவை அதிகரித்து வருவதால், பொருளாதார வளர்ச்சி குறையாது என்று கூறியுள்ளது. இருப்பினும், சர்வதேச பொருளாதார மந்தநிலையால், வணிக பொருட்கள் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில், பணவீக்க கணிப்பை 5 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாக குறைத்துள்ளது.