தேசிய செய்திகள்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் கொடி ஏற்றினார்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் தேசியகொடி ஏற்றினார்.

புதுடெல்லி,

சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள வைகை மற்றும் பொதிகை தமிழ்நாடு இல்லங்களில் தமிழக அரசு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையருமான ஜஸ்பீர்சிங் பஜாஜ் தேசியகொடியை ஏற்றிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மற்றொரு முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...