புதுடெல்லி,
மராட்டியம், டெல்லி, குஜராத், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா, மத்திய அரசு சுகாதார திட்டம், மாநில சுகாதார காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் வருகிற தனியார் ஆஸ்பத்திரிகளுடன், கூடுதலான தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு சென்றது.
இதை மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து அந்த வேண்டுகோளை ஏற்று, கூடுதலான தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்ற மக்களவையில் சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி அஷ்வினி சவுபே, கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
கடந்த 15-ந்தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 19 ஆயிரத்து 422 தனியார் கொரோனா தடுப்பூசி மையங்கள் கோ-வின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.