தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்று சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

இடைக்கால தலைவராக இருக்கும் சேனியாகாந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெடர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சேனியா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தனது கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் உங்கள் தலைமையின் மீதான எங்கள் முழுமையான மற்றும் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும், எங்கள் தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். காங்கிரஸ் கட்சி உங்கள் கைகளில் அல்லது ராகுல் ஜியின் கைகளில் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். வேறு எவராலும் அதை ஈடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை