தேசிய செய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த மாதம் இலக்கை அடையும் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஆதித்யா-எல் 1 விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தினத்தந்தி

ஆமதாபாத், 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து, விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும். விண்கலம் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்பட்டது. விண்கலம் தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து விலகி வெற்றிகரமாக 'லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் ஆமதாபாத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றும் கூறினார். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை