தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 17-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

நேரமின்மை காரணமாக விசாரணையை தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தபோது, வேதாந்தா நிறுவனத்தில் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம், இரண்டு முறை பட்டியிலடப்பட்டும் ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே, மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கும் வகையில் டிசம்பர் 6-ந் தேதி பட்டியலிட வேண்டும் என முறையிட்டார்.

அப்போது நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை ஜனவரி 17-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு