தேசிய செய்திகள்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாளை முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும்

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபி கடலில் புதிய புயல் உருவாகியது.

'கியார்' என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தட்பவெப்ப நிலை மாறி, மூன்று நாட்களாக மழை குறைந்தது. இந்த புயல் அடுத்த சில நாட்களில் ஓமன் கரைப்பகுதியை நோக்கி நகரும்.

வங்க கடலில், தென் மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடையும் என கூறப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது