புதுடெல்லி,
ஒருநாள் பயணமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி இன்று இந்தியா வருகை தந்தார். டெல்லி வந்தடைந்த அஷ்ரப் கானி,வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தரப்பு உயரதிகாரிகளை அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர்.
பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை ஆகியோரை அஷ்ரப் கானி தனித்தனியாக சந்தித்தார். இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு துறைசார்ந்த நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.டெல்லியில் உள்ள விவேகானந்தர் பன்னாட்டு மையத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் சிறப்புரையாற்றும் அஷ்ரப் கானி, இன்று மாலை விமானம் மூலம் காபூல் செல்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் தனது முதல் அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வரும் நிலையில் அஷ்ரப் கானியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.