தேசிய செய்திகள்

காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக மோடி இருக்கிறார்; ராஜ்நாத்சிங்

மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக பிரதமர் மோடிதான் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெலில்,

மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக பிரதமர் மோடிதான் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியை போல தலைவர் வேறு யாரும் இல்லை.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு அலை ஒரு முக்கிய காரணியாக இருக்கும். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்து மக்கள் சோர்வு ஆகவில்லை. கடினமான முடிவுகளையும் துணிச்சலாக எடுக்கும் திறன் மோடிக்கு உள்ளது. மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதால் மக்கள் மத்தியில் பிரதமருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. சாதி மத எல்லைகளை கடந்து எதிர்ப்பே இல்லாத தலைவராக பிரதமர் உள்ளார். உலக அளவில் செல்வாக்கு உள்ள தலைவராக மோடி உள்ளார்" என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்