தேசிய செய்திகள்

பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு பற்றி விவாதிக்க காங்கிரசில் 3 புதிய குழுக்கள் நியமனம்

பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள்

தினத்தந்தி

புதுடெல்லி,

பொருளாதாரம், வெளிநாட்டு விவகாரங்கள், தேச பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும் 3 தனித்தனி குழுக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் இருப்பார்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஆனந்த் சர்மா, சசிதரூர், சல்மான் குர்ஷித் மற்றும் சப்தகிரி உலகா ஆகியோர் இடம்பெறுகிறார்கள். சல்மான் குர்ஷித், இக்குழுவின் அமைப்பாளராக இருப்பார்.

தேச பாதுகாப்பு தொடர்பான குழுவில் நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, வின்சென்ட் எச்.பாலா, வி.வைத்திலிங்கம் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாளராக வின்சென்ட் எச்.பாலா இருப்பார்.

இத்தகவல்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு புத்துயிரூட்ட கட்சியை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு 23 மூத்த தலைவர்கள், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி கடிதம் எழுதிய குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி, சசிதரூர் ஆகியோருக்கும் இந்த குழுக்களில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு