தேசிய செய்திகள்

60 நாட்களுக்கும் மேலாக டார்ஜிலிங்கில் முழு அடைப்பு: போராட்டைத்தைகைவிடுமாறு ராஜ்நாத்சிங் கோரிக்கை

60 நாட்களுக்கும் மேலாக டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் போராட்டைத்தைகைவிடுமாறு ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதியை தனி மாநிலமாக்க கோரி கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் காரணமாக அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 2 மாதங்களாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது. இதனால், டார்ஜிலிங் மலைப்பகுதியில் 60 நாட்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், டார்ஜிலிங் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். ரேஷன் பொருட்கள் விநியோகம், இணையதளம், கேபிள் டிவி, உள்ளூர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவையும் மீண்டும் செயல்பட அனுமதிக்குமாறும் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். தனிமாநிலம் கோரி உண்ணா விரதம் இருக்கும் 12க்கும் மேற்பட்ட மக்களும் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு