தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுக்கும் அதே சமயத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பேராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. சென்னை, டெல்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் திமுக இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சுப்ரீம்கோர்ட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிற நிலையில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து