தேசிய செய்திகள்

விவசாயிகளின் நோக்கம் மத்தியில் ஆட்சி மாற்றமல்ல: ராகேஷ் திகாய்த்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவது விவசாயிகளின் நோக்கமல்ல என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

திருத்தம் செய்யப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என விவசாய சங்கங்கள் கூறி வருகின்றன. இந்த நிலையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் சிங்கு எல்லையில் விவசாயிகள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அரசு அதன் பணியைச் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும். அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வரை போராட்டங்கள் நீடிக்கும்.

நாடு முழுவதும் பெரிய பெரிய கூட்டங்கள் நடத்தியும், 40 லட்சம் டிராக்டர்களை இணைத்தும் போராட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த இயக்கத்தை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு விவசாய அமைப்பு தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்றார்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்