தேசிய செய்திகள்

5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்