புதுடெல்லி
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-
* வேளாண்மை, ஊரக பொருளாதாரம், ஏழைகளுக்காக சுகாதாரம் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை
* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்; 2018-2019 ஆம் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
* விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்
* 2018-2019 ஆம் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
* கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும்
* மேலும் 8 கேடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
* பிரதமரின் சவுபாக்யா யேஜனா திட்டத்துக்கு ரூ. 16,000 கேடி ஒதுக்கீடு
* இரண்டு கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்படும்
* காற்றுமாசுபாட்டை கட்டுபடுத்த ஹரியானா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யப்படும்
* மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ 1290 கோடி ஒதுக்கீடு.
* அழுகும் காய்கறிகளை பதப்படுத்த ரூ 500 கோடி ஒதுக்கீடு
* குடிசை தொழிலில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் சிறு விவசாயிகளுக்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு
#BJP | #UnionBudget | #Budget2018 | #IndianEconomy #Farmers | #Agriculture #Vegetables