தேசிய செய்திகள்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் மனு

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான கிறிஸ்டியன் மைக்கேல், ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் கைமாறியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன்கேரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர், சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேரி மனு தாக்கல் செய்தார். அப்பேது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று தெரிவித்து மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜாமீன்கேரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ஜனவரி மாதம் முதல் காவலில் சிறையில் இருப்பதாகவும், சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து