தேசிய செய்திகள்

மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் காங்.தலைவர் அகமது படேல் திடீர் சந்திப்பு

மத்திய மந்திரி நிதின் கட்காரியை காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேல் எம்.பி. டெல்லியில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியை நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசினார்.

மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் சிவசேனா இடையே கடும் இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால் இது அரசியல் நிமித்தமான சந்திப்பு இல்லை என்றும், குஜராத் மாநிலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து நிதின் கட்காரியிடம், அகமது படேல் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு