தேசிய செய்திகள்

விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்தது 6 பேர் பலத்த காயம்

கேதார்நாத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாகை மாவட்டத்தின் குப்தகாசி என்னும் இடத்தில் இருந்து நேற்று காலை கேதார்நாத் நகருக்கு கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 6 வீரர்கள் இருந்தனர்.

அந்த ஹெலிகாப்டர் காலை 8.20 மணி அளவில் கேதார்நாத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த இரும்பு கம்பிகளின் மீது மோதியதில் தீப்பிடித்துக் கொண்டது. பின்னர் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 வீரர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு