பக்சார்,
விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து பீகாரின் பிதா விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் விசிறியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிக்பூரில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிரங்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.