கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ப.சிதம்பரம், 2006-ம் ஆண்டு காலக் கட்டத்தில் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் அமர்வு விசாரித்து வருகிறது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட முன்ஜாமீனை ஏற்க முடியாது. அவர்கள் இருவரும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி எம்.கே.நாக்பால் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி எம்.கே. நாக்பால், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்