தேசிய செய்திகள்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட 7 ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை நீடித்து உள்ளது. #Chidambaram #KartiChidambaram

புதுடெல்லி

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது . இதில், ஜூலை 10ந்தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனு மீது அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி இன்று நடைபெற்ற விசாரணையில் ப. சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அது போல கார்த்தி சிதம்பரத்தையும் ஆக. 7 வரை கைது செய்ய தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு