தேசிய செய்திகள்

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 5,6,7,மற்றும் 12 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாக சிறப்பு நீதிபதி ஓபி சைனியிடம் அமலாக்கத்துறை தெரிவித்தது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜர் ஆவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபேது, மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,500 கேடியை ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

இதற்கு பெருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் ப.சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும் இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் செந்த நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்